--- --:--:-- --

4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்..தாய் கொடுத்த பேட்டி..!

2

கோவையில் கல்லூரி மாணவன் நான்காவது மாடியில் இருந்து குதித்த விவகாரத்தில் சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து தனது மகன் குதிக்கவில்லை என மாணவனின் தாயார் கூறியுள்ளார்.

 

கோவை செட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த பிரபு கல்லூரி விடுதியில் நான்காவது மாடியில் இருந்து குதித்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து அவர் குதித்ததாக கூறப்பட்டது.

 

ஆனால் அதனை அவரது தாயார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது போன்ற தகவல்களால் தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். தனது மகனின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினையும் பொதுமக்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Right Menu Icon