மின்கம்பத்தில் சிக்கி கொண்ட காகம் மீட்பு..!
சென்னை ராமாபுரத்தில் மின்கம்பத்தில் சிக்கி தவித்த காகம் பத்திரமாக மீட்கப்பட்டது. பிரதான சாலையில் உள்ள மின்கம்பத்தில் நேற்று முன்தினம் காகம் சிக்கிக்கொண்டது. மின்சாரம் பாய்ந்து காகம் இறந்துவிட்டதாக அந்த பகுதி வாசிகள் தெரிவித்தனர்.
ஆனால் இரண்டு நாட்களாக அந்த காகம் தொடர்ந்து சத்தம் எழுப்பியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் மின் இணைப்பை துண்டித்து விட்டு மின்கம்பத்தில் சிக்கி இருந்த காகத்தை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அதற்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை செய்தனர். இதனால் காகம் இயல்பு நிலையை அடைந்தது.





