--- --:--:-- --

கோவை : பன்னிமடை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி.பொதுமக்கள் சாலை மறியல்.பரபரப்பு !!!

8.1

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.இறந்து விட்டார்.இவரது மனைவி நீலாவதி.வயது 73.இவர் தினந்தோறும் அதிகாலை 6 மணிக்கு எழுந்து பூ பறித்து விட்டு வருவது வழக்கம்.வழக்கம் போல் இன்று பூ பறிக்க சென்று விட்டு வரும் பொழுது எதிரே வந்த ஒற்றை காட்டு யானை அவரின் தலையை முறித்து தூக்கி வீசியுள்ளது.இதனால் நீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க தவறிய வனத்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சிவா,தடாகம் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ்,நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ்,துணைத்தலைவர் திருநாவுக்கரசு,மாவட்ட கவுன்சிலர் சரவணக்குமார்,கவுன்சிலர் நாகராஜ்,திமுக ஒன்றிய பொறுப்பாளர் சி.எம்.குமார்,கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சண்முகம்,ரங்கநாதன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து உடலை மீட்ட காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலைமறியலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு வெட்டப்பட்டுள்ள அகழியை அகலப்படுத்தியும்,ஆழப்படுத்தவும் வேண்டும் என்றும்,அப்பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகும் இடங்களை கண்டறிந்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

மேலும்,இதுவே இப்பகுதியில் நிகழ்ந்த கடைசி இறப்பாக இருக்க வேண்டும் எனவும்,இல்லையெனில் அடுத்த கட்டமாக பொதுமக்களை திரட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon