கோவை : ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்க்க தடை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !!!
தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் கெளுத்தி மீனினங்களை உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன் இனங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் வளர்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், சம்மந்தப்பட்ட மீன்வளர்ப்புக்குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அரசால் அழிக்கப்படும் எனவும்,
மீன் பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல்கொர்டை, வெள்ளிக் கெண்டை மற்றும் கண்ணாடிக்கௌர்டை போன்ற இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளர்க்கலாம்.
இவ்வகையான மீன்களை வளர்ப்பதற்கு மீன்வளத்துறையால் பல்வேறு திட்ட மானியங்கள் வழங்கப்படுகின்றன எனவும்,ஈரோட்டில் உள்ள மீன்வள உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு மீன்வளர்ப்பில் உள்ள பல்வேறு திட்டங்களை அறிந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






