கோவை : மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கொட்டும் மழையில் நள்ளிரவு ஆய்வு செய்த கலெக்டர் ராசாமணி !!!
கோவையில் நேற்று மாலை முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியது.இரவு முழுவதும் இடைவிடாது பலத்த மழை பெய்து வந்தது.இதனால் கோவையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல பாய்ந்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததாக வந்த தகவலை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவிநாசி மெயின் ரோடு, சங்கனூர் பள்ளதாக்கு, திருச்சி மெயின் ரோடு மற்றும் நஞ்சுண்டாபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு 1 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் குடியிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியதோடு, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தரும்படி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டரால் பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.






