காதுக்குள் புகுந்த கரப்பான் பூச்சி..!
ஒருவரின் காதுக்குள் கரப்பான் பூச்சி புகுந்து கொண்ட விஷயம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் அட்லாண்டா பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் சமீபத்தில் நீச்சல் குளத்திற்கு சென்றுள்ளார்.
நீந்தி முடித்ததும் காது வலியால் அவதிப்பட துவங்கியுள்ளார். விரைவாக நீந்தியதால் காதில் தண்ணீர் புகுந்து இருக்கலாம் என்று கருதி அவர் அதனை பொருட்படுத்தாமல் அங்கு சென்றிருக்கிறார். அடுத்த நாள் காலையில் எழுந்தபோது காது அடைப்பு இருப்பதை போல் வித்தியாசமாக உணர்ந் அதேசமதார்.
அதே சமயம் காதில் வலி அதிகரிக்க தொடங்கியது. அதனால் மருத்துவமனைக்கு சென்று காதில் ஊசி செலுத்தியுள்ளார். மருத்துவர் ஆன்டிபயாடிக் மருந்துகளை வழங்கினார். அத்துடன் தலையை ஒருபக்கமாக சாய்த்து வைத்து படுக்க அறிவுறுத்தினர். அப்படி செய்தும் காது வலி நீங்காமல் அவதிப்பட்டார்.
நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்தார். இதனால் படுக்கையிலிருந்து எழுந்து நன்கு குதித்துள்ளார். சிறிது தூரம் வேகமாக ஓடினார். நன்கு தலையை சுற்றியுள்ளார். ஆனால் காது வலி நீங்கவும் இல்லை. குறையவும் இல்லை.
ஒரு வாரம் கழித்து காது, மூக்கு தொண்டை மருத்துவரிடம் சென்றுள்ளார். அவர் காதை பரிசோதித்தபோது உள்ளே கரப்பான் பூச்சி இருப்பதை டாக்டர் பார்த்தார். ஐந்தே நிமிடங்களில் அந்த கரப்பான் பூச்சியை வெளியே எடுத்துள்ளார். அதன்பிறகு வலியிலிருந்து அவர் விடுபட்டுள்ளார்.





