முதலமைச்சர் மு.க ஸ்டாலின் – மம்தா பானர்ஜி இன்று நேரில் சந்திப்பு..!
சென்னை வரும் மேற்குவங்க முதலமைச்சர், மம்தா பானர்ஜி முதலமைச்சர் மு க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்திக்க உள்ளார். மேற்கு வங்கத்தில் இல கணேசன் சகோதரரின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக வரும் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை மம்தா தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார்.
அப்பொழுது தேசிய அளவில் கூட்டணி கட்சிகள் குறித்து முதல்வர்கள் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் சந்திப்பு நடைபெற உள்ளது.





