2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்..!
2,500 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 9 பயனாளர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
2,500 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, தலா 20 கிராம், 5 கிராம் ஏலக்காய் மற்றும் முழு நீள கரும்பு ஆகியவை அடங்கியுள்ளன.
மேலும் ஒரு கோடியே 80 லட்சம் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.






