--- --:--:-- --

டிசம்பர் 31 வரை இங்கிலாந்து விமான சேவை ரத்து – மத்திய அரசு

2

டிசம்பர் 31 வரை இங்கிலாந்து விமான சேவைகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், பெரு உட்பட 30 நாடுகளால் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து உலக நாடுகளிலிருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சூழல் உருவாகியுள்ளது.

 

எல்லைகள் மூடப்பட்ட சூழலை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நல்லதொரு பலன் கிடைக்கும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

 

வெளிநாடுகளில் இருந்து சரக்கு போக்குவரத்து குறித்து முடிவெடுக்கவும் இறக்குமதி ஏற்றுமதி குறித்து ஆலோசிக்கவும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார்.

 

இதனிடையே இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவி இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கொரொனா தொற்று உச்சத்தில் இருக்கும் அந்த நாட்டில் மேலும் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசங்களை தவறாமல் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon