--- --:--:-- --

3 ஆம் வகுப்பு மாணவர் குளியலறையில் கழுத்து அறுத்து கொலை

1553160389-crime_murder_GettyImages-1072647358

ஆந்திராவில் அரசு விடுதியில் 3-ஆம் வகுப்பு மாணவர் குளியல் அறையில் கழுத்து அறுத்து கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணா மாவட்டம் சல்லப்பள்ளியைச் சேர்ந்த 8‌ வயதான தாசரி ஆதித்யா, 4-ஆம் வகுப்பு பயிலும் அண்ணனுடன் அங்குள்ள அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் தங்கி பயின்றுள்ளார்.

 

விடுதியில் இருவரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். திங்களன்று இரவு தாசரி ஆதித்யா, அறைக்கு வராத நிலையில், பக்கத்து அறையில் தூங்கலாம் எனக் கருதி அவனது அண்ணன் தேடவில்லை என சொல்லப்படுகிறது. காலையிலும் ஆதித்யா காணாததால் தேடியபோது, விடுதியின் குளியல் அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அவனது உடலைக் கண்ட சக மாணவர்கள் அதிர்ந்து போயினர்.

 

தகவலின்பேரில் வந்த அவனிகட்டா போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பினர். விடுதியின் வார்டன் மற்றொரு விடுதிக்கும் பொறுப்பாளர் என்பதால், சம்பவத்தன்று இரவு அந்த விடுதியில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களிடையே மோதல் ஏதும் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon