நடு ரோட்டில் அமர்ந்து மது அருந்திய குடிமகன்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சாலையின் நடுவே அமர்ந்து மது அருந்திய குடிமகனால் வாகன ஓட்டிகள் அவதிபட்டனர். சத்யமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம் 2 டாஸ்மாக் கடைகளை உள்ளன. இங்கு மது வாங்கி மாற்றுத்திறனாளி ஒருவர் சாலை நடுவே அமர்ந்து நிதானமாக குடித்தார் அவர். அமர்ந்திருந்த சாலையில் வாகனங்கள் செல்வதைப் பற்றி அந்த குடிமகன் கண்டுகொள்ளவே இல்லை.
தகவலறிந்து வந்த போலீசார் குடிமகனை சாலையோரம் அழைத்துச் சென்று அமர வைத்தனர். குடிமகனால் சுமார் ஒரு மணி நேரம் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் மெதுவாகவே சென்றன. இதுபோன்ற நபர்களால் தான் சாலை விபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.






