சிரெஞ்சுகளில் விற்கப்படும் சாக்லேட்டுகள் குழந்தைகளுக்கு ஆபத்து..!
வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிரெஞ்சுகளில் விற்கப்படும் சாக்லேட்டுகள் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உண்டாக்கியுள்ளது. லாகு பஜார், வண்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டாக்டர் சாக்லேட் என்ற பெயரில் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் சாக்லெட்டுகளை குழந்தைகள் ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிட்டு வந்தனர்.
இவை மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் உண்மையான சிரெஞ்சுகளாக இருக்கலாம் என மாநகராட்சி அலுவலர்கள் அதனை நேரில் சென்று வாங்கி சோதனை செய்ததில் அவர்களுக்காகத் தனியாக தயாரிக்கப் பட்டவை என தெரியவந்தது.
இருப்பினும் சில குழந்தைகள் அடையாளம் தெரியாமல் மருத்துவமனைகள் மற்றும் குப்பையில் கிடக்கும் சிரெஞ்ச்களைப் பார்த்தால் சாப்பிடும் வாய்ப்புள்ளதால் உண்மையான சிரெஞ்ச்களில் தயாரிக்கப்படும் என்பதாலும் அந்த வகையில் சாக்லேட்டுகளை வாங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






