--- --:--:-- --

அமெரிக்காவை கிண்டலடித்து சீனா வெளியிட்ட குறும்படம் ! இனி டிரம்பின் நடவடிக்கை என்னவோ?

9

கொரொனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை கேலி செய்யும் வகையில் அனிமேஷன் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ள சீனா நாகையாடியுள்ளது.

 

“once upon a virus” என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தில் லேகோ போன்ற உருவங்களில் ஒரு போர் வீரனும், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையும் இடம்பெற்றுள்ளன. புதிதாக வைரஸ் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறோம் என்கிறான் போர்வீரன். ஆனால் என்ன அது வெறும் ப்ளுவாக இருக்கும் என கூலாக பதில் அளிக்கிறது சுதந்திர தேவி.

 

நிலைமையின் தீவிரம் புரிகிறதா என்று கேட்கும் போர்வீரனிடம் நாங்கள் மாற்றி மாற்றி பேசினாலும் சரியாகத்தான் பேசுவோம் என்ற ஒரு டயலாக்கை எடுத்துவிடுகிறது சுதந்திர தேவி சிலை. நீங்கள் இப்படி பேசுவதால் தான் எங்களுக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கிறது என்ற பாணியில் டிரம்பின் பேச்சை கிண்டலடிக்கும் விதத்தில் முடிகிறது குறும்படம்.

Leave a Reply

Right Menu Icon