--- --:--:-- --

பிங்கர் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா மறுப்பு..!

14

இந்திய, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையடுத்து ஓரளவுக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெற சீனா ஒப்புக் கொண்ட போதும் பிங்கர் மலைத் தொடரில் இருந்து முழுமையாக படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை.

 

அங்கிருந்து சீனா தனது படைகளை முழுமையாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவில் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கிழக்கு கல்வான் பள்ளத்தாக்கு கோப்ராபோஸ்ட் ஆகிய பகுதிகளிலிருந்து படைகளை முழுமையாகத் திரும்பப் பெற சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

 

ஆனால் பிங்கர் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள சீனா ஒப்பு கொடுக்கவில்லை. பிங்கர் 4 பகுதியின் பிளாக் டாப், க்ரீன் டாப் போன்ற சில இடங்களில் இருந்து மட்டும் சீனப் படைகள் தங்களது கட்டுமானங்களை நீக்கியுள்ளனர்.

 

ஆனால் ஏப்ரலுக்கு முன்பு இரு நாட்டுப் படைகளும் எந்த இடத்தில் நிலை கொண்டிருந்ததோ அந்த இடம் வரை சீனப் படைகள் திரும்பி செல்ல வேண்டும் என்று இந்திய தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 15 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் இதனை இந்தியா சீனாவிடம் உறுதிபட தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon