--- --:--:-- --

கொரொனா வைரஸ் தொடர்பான விசாரணைக்கு சீனா மறுப்பு..!

1

கொரொனா வைரஸ் தோன்றுவது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் புதிய விசாரணைக்கு சீனா மறுப்பு தெரிவித்து வருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள தேசிய வெள்ளை மாளிகையை செய்தித்துறை செயலாளர் சீனாவின் மறுப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

பொறுப்பற்ற பகிரங்கமாக ஆபத்தான நிலைப்பாட்டை சீனா எடுப்பதாக சாடியவர் சீனாவிடம் கொரொனா தொடர்பான ஆவணங்களையும் ஆய்வுபடுத்தும் சேம்பல்களை கேட்ட மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்துகின்றது.

 

அடுத்து ஒரு பேரிடர் வருவதை தடுக்க இதுவும் மிகவும் தீவிரமானது என்றும் அவர் தெரிவித்தார். ஆய்வுக்கூட விவகாரத்தில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon