--- --:--:-- --

கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை..!

1

கொரொனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கொரொனா கட்டுப்பாடுகள் அக்டோபர் 31-ம் தேதி வரை உள்ளன.

 

இந்தநிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விஜயதசமியன்று கோயில்களை திறக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

இதனிடையே விஜயதசமியன்று கோயில்களை திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சூழலில் முதலமைச்சர் நடத்தும் ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Right Menu Icon