எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க முதல்வர் வலியுறுத்தல்..!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டிய தாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கான நிலம் அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதை தாண்டி வேறு முன்னேற்றம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குனர் நியமிக்கப்பட சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்த இந்த குழுக்களுக்கு தெளிவான அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையை தற்காலிகமாக வேறு இடத்தில் தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஏனைய பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் இதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு பணிகளை செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் .கடிதம் எழுதி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது





