--- --:--:-- --

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

1

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

பள்ளிக் கல்வித் துறை திட்டங்கள் மற்றும் 2ம் கட்ட சென்னை மெட்ரோவுக்கான நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார்.

 

இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை முதல்வர் ஸ்டாலின் பரிசாக அளித்தார்.

Right Menu Icon