நீலகிரியில் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் பழனிசாமி..!
நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் கல்லூரிகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிய மருத்துவக் கல்லூரி நீலகிரி, மாவட்டம் உதகையில் அமையவுள்ளது. சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் 447 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கும் இந்த மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.







