--- --:--:-- --

பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்..!

1.1

மிழகத்தில் பல்வேறு புதிய அரசு கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் குழந்தைகளுக்கான கொள்கையும் வெளியிட்டார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு 3 கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

 

இதைப்போல் உள்துறை சார்பில் 44 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 270 காவலர் குடியிருப்புகள், இரண்டு காவல் நிலையங்கள், இரண்டு காவல்துறை கட்டிடங்கள், ஆறு உதவி அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

 

மேலும் தமிழ்நாடு தடய அறிவியல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள தடய மரபணு தேடல் மென்பொருளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். இதன்மூலம் நாட்டிலேயே இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

 

இந்த மரபணு தேடல் மென்பொருள் மூலம் கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை மரபணு ஒப்பீடு ஆய்வு மூலம் உரிய பெற்றோரிடம் ஒப்படைத்தல், குற்றவாளிகளை கண்டறிதல் போன்ற பணிகள் எளிமையாகவும், துரிதமாகவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு இடையே தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 ஐ
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

Right Menu Icon