அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலியான சிசிடிவி காட்சிகள்..!
சென்னை சோழிங்கநல்லூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பனையூர் அடுத்த நயினார் குப்பத்தை சேர்ந்தவர் ஊத்துக்காட்டம்மாள்.
மீன் வியாபாரம் செய்யும் இவர் தனது தலையில் மீன் கூடையை வைத்துக்கொண்டு ஓஎம்ஆர் சாலையை கடக்க முயன்றார். அப்போது கேளம்பாக்கம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மூதாட்டி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






