ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
வளமிக்கு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் என ஆசிரிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் நாட்டின் வருங்கால தூண்கள் ஆன மாணவ செல்வங்களுக்கு அழிவில்லா கல்வி செல்வத்தை அளிப்பது ஒரு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிமுறைகளையும் போதிப்பவர்கள் ஆசிரியர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் நல்ல ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விரு,து கனவு ஆசிரியர் போன்ற சிறப்பு மிக்க விருதுகளை வழங்கி ஆசிரிய பெருமக்களை வரவேற்பதாக முதல்வர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.






