மாமூல் கொடுக்க மறுத்ததால் கோழி கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு..!
வேலூரில் மாமுல் கேட்டு கொடுக்க மறுத்த கோழி கடை கடை உரிமையாளரை ரவுடி கும்பல் அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மாவட்ட நீதிமன்றம் எதிரே சாதிக் பாஷா என்பவர் கோழி கறி கடை நடத்தி வருகிறார்.
வழக்கம்போல கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சிசிடிவி காட்சி மூலம் ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். படுகாயமடைந்த சாதிக்பாட்சா வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.






