சிக்கன், மட்டன் கறி ஆர்டர் செய்தவருக்கு எலிக்கறி பார்சல்..!
மும்பையில் உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் எலி கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக சமையல்காரர் மற்றும் மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை பாந்திராவில் உள்ள பஞ்சாபி உணவகம் ஒன்றில் அனுராக் சிங் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சிக்கன் மற்றும் மட்டன் கறிகளை ஆர்டர் செய்து உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
அப்பொழுது சிக்கன் கறியில் வழக்கத்திற்கு மாறான சுவையில் இறைச்சி ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்ததில் அது இறந்த எலி கூட்டு என்பதை கண்டறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் அதுகுறித்து மேலாளரிடம் கேட்ட பொழுது அவர் மழுப்பலான பதில் அளித்ததாக தெரிகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.






