--- --:--:-- --

சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்து சிதறி தீ விபத்து..!

8

கேரளாவில் தலையணைக்கு கீழே மொபைல்போனை சார்ஜ் போட்டபடி தூங்கியவர் தீப்பிடித்ததில் காயமடைந்தார். கொல்லம் மாவட்டம் ஒச்சரா என்ற இடத்தை சேர்ந்த சந்திரபாபு என்பவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று வீட்டில் இருந்து கீழே தனது மொபைல் போனை சார்ஜ் செய்ய வைத்து விட்டு தூங்கியுள்ளார்.

 

அப்போது மொபைல் போன் வெடித்து தலையணையில் தீப்பிடித்தது. அவரின் முகம் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரபாபு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon