தமிழ்நாட்டிலே தமிழுக்கு இடமில்லையா..? உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி..!
தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தும் தவறாக பயன்படுத்துவதாக கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது இட ஒதுக்கீடு தராதது குறித்து தகவல் உரிமை சட்டத்தில் கேட்டபோது பதில் அளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் பட்டம் பெறும்வரை ஆங்கில வழியில் படித்து விட்டு தொலைதூரக்கல்வியில் தமிழில் ஏதாவது படித்து இட ஒதுக்கீடு பெறுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகிவரும் நிலையில் ஊக்கப்படுத்த வழங்கும் சலுகைகள் தவறாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்தனர்.
மேலும் தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வரை குரூப்-1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது எனவும் தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழில் இருக்கும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.






