பாபா ராம்தேவுக்கு எதிராக குற்றச்சாட்டு..!
போலி அறிவியலை முன்னிறுத்தி நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராக பேசிவரும் பாபா ராம்தேவுக்கு எதிராக பொள்ளாச்சி கிளை இந்திய மருத்துவ சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அசாம், உத்தரப் பிரதேசம், பிகார், கர்நாடகம், மராட்டியம் , ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் பொள்ளாச்சி கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி கிளை இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மூர்த்தி போலி அறிவியலை முன்னிறுத்திஅவர்களுக்கு ஆதரவாக ஒன்றிய மாநில அரசின் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்பாடு மனவருத்தத்தை அளிக்கிறது என்றும் ஒன்றிய அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் மருத்துவ பணியாளர் மீது தாக்குதல் நடத்துபவர்களை விரைவாகவும் கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.







