--- --:--:-- --

சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

6

மிழகம் மற்றும் புதுச்சேரியில் 5ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இலங்கை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரியில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon