நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் வடக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் மற்றும் புதன் கிழமை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.







