சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தல்..!
நாட்டில் கொரொனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியங்கா ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளனர். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரையிலும், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வேகமாக கொரொனா பரவி வருவதால் சிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தேர்வு நடைபெறும் போது பெருந்தொற்று கட்டுப்பாடு பகுதியாக இருந்தால் அதற்கு மத்திய அரசும் சிபிஎஸ்சி வாரியமும் தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அசாதாரண சூழலில் தேர்வு நடத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றுச்சூழலில் தேர்வு நடத்துவது பாதுகாப்பானது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைப்போன்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வல்லநாடு தொகுதியில் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த நிலையில் சிபிஎஸ்சி தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடுமையான முடிவுகளை எடுப்பதற்கு முன் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் இளைஞர்களின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம் என்றும் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.







