--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

13

தென் மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon