--- --:--:-- --

view once வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் ஆப்..!

12

வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள், வீடியோக்களை ஒரே ஒருமுறை மட்டுமே பார்க்கும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது பயனர்களின் தனி நபர் உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

 

இந்த வசதியை பயன்படுத்தி அனுப்பப்படும் போட்டோக்கள் வீடியோக்களை மற்றொருவர் ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க இயலும். ஒருமுறை ஃபோட்டோவை ஓப்பன் செய்து பார்த்துவிட்டு குறிப்பிட்ட அந்த சாட்டை விட்டு வெளியே வந்து விட்டால் அந்த புகைப்படம் தானாகவே மறைந்துவிடும்.

 

மேலும் அந்த புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனில் சேவ் ஆகாது. வேறு ஒருவருக்கு பார்வர்டு செய்ய இயலாது எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொள்ள எந்த தடையுமில்லை என வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon