தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு ..!
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள் தென் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





