--- --:--:-- --

திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகர் ஆர்யா பண மோசடி..!

12

திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை குறித்து பதிலளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

 

இதுகுறித்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த வித்யா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நடிகர் ஆர்யாவின் பண மோசடி வழக்கின் விசாரணை தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பதிலளிக்க சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அடுத்த விசாரணை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் இருபத்தி ஒரு லட்சம் மோசடி செய்ததாக ஆர்யா, அவரது மனைவி மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon