--- --:--:-- --

தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

10

மிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நாளை 29ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon