தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு ..!
தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும் வரும் நாட்களில் இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வரையிலும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




