--- --:--:-- --

தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு..!

4.1

மிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை இயல்பை விட மழை 44 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது.

 

இந்த காலகட்டத்தில் வழக்கமாக 25 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் 13 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. மாவட்ட வாரியாகவும் வடகிழக்கு பருவமழை குறைவாகவே பதிவாகியுள்ளதாகவும் சென்னையில் 15 சதவீதம் குறைவாகவே மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வரும் 11-ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னை முதல் 4 வரை கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் மாத பிற்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

 

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழக கடலோர பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டப்பிடாரம், வீரகனூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய இடங்களில் 4 செ.மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon