--- --:--:-- --

முக கவசம் அணியாதவர்களை அடையாளம் காணும் ஆப்..! போலீசாருக்கு உதவும் புதிய செயலி..!

3

துரையில் முக கவசம் அணியாதவர்கள், அரைகுறையாக முக கவசம் அணிந்து இருப்பவர்களை அடையாளம் காணும் வகையில் போலீசாருக்கு உதவும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜும் ஆப் என்ற செயலி சிசிடிவி கேமராக்களோடு இணைக்கப்பட்டிருக்கும்.

 

முதற்கட்டமாக 29 சிசிடிவி கேமராக்கள் இந்த செயலியோடு இணைக்கப்பட்டுள்ளதாக கூறும் போலீசார் முககவசம் அணியாதவர்கள், அரைகுறையாக முக கவசம் அணிந்து இருப்பவர்களை படம்பிடித்து தங்களுக்கு தெரியப்படுத்தும் என்கின்றனர்.

 

உடனடியாக அந்த பகுதி காவலர்கள் சம்பந்தப்பட்ட நபரை அணுகி அபராதம் விதிப்பார்கள். அத்துடன் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோர் குறித்தும் தகவல் அனுப்பி இது செயலி எச்சரிக்கும் என்கின்றனர் போலீசார்.

 

பல்வேறு வகைகளில் இந்த செயலை காவல் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon