கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி..!
தேனி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்துவிட்டு கணவரை காணவில்லை என நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டி பள்ளி தெருவை சேர்ந்த முத்து காளை- கலையரசி தம்பதிக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கட்டிட தொழில் செய்து வந்த இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதனிடையே கடந்த ஐந்தாம் தேதி கணவரை காணவில்லை என கலையரசி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே மேலப்பட்டி செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் முத்துக் காளையின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கலையரசிக்கும், சேதுபதி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும் இதற்கு கணவர் இடைஞ்சலாக இருந்ததால் கள்ள காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்த போலீசார் கள்ளக்காதலனின் நண்பனை தேடி வருகின்றனர்.






