தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







