--- --:--:-- --

வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு..!

7

வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நாளை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

 

ஜூன் 4-ஆம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர், குடியாத்தம், உத்திரமேரூர், போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா ஏழு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Right Menu Icon