--- --:--:-- --

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தது செல்போன்..! ஆனால் வந்தது வெங்காயம்..!

1

ஹிமாச்சல பிரதேசத்தின் ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு வெங்காயத்தை அனுப்பிய அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது.

 

அனுகிராமத்தை சேர்ந்த சசிதாபூர் என்பவர் சில தினங்களுக்கு முன்பு இணையதளம் மூலம் ஒரு பிரபல நிறுவனம் செல்போனுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். அந்த செல்போனின் விலை 15 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் கிரெடிட் கார்டு மூலம் அனுப்பியுள்ளார்.

 

சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு வந்த செல்போன் பெட்டி பார்சலை பிரித்தபோது செல்போனுக்கு பதிலாக வெங்காயம் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இதுதொடர்பாக அந்த செல்போன் நிறுவனத்திற்கு புகார் தெரிவித்துவிட்டு செல் போன் வரும் என்று பரிதாபமாக காத்திருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon