ஸ்கெட்ச் போட்டு நகைகளை அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகை வாங்குவது போன்று நடித்த மர்ம நபர்கள் 5 சவரன் தங்க நகையை அபேஸ் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திண்டிவனத்தில் உள்ள கிருஷ்ண பிள்ளை வீதியில் திலீப் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கடைக்கு வந்த இரு ஆசாமிகள் நகை வாங்குவது போல் நடித்து ஆசை வார்த்தைகள் கூறி கவனத்தை திசை திருப்பி 5 சவரன் தங்கச்செயினை அபேஸ் செய்துவிட்டு சென்றனர்.
கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அங்கு இரண்டு பேர் உடல்கள் கல்லாவில் இருந்த நகையை திருடி தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது.





