இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார் – சிசிடிவி காட்சி
சேலத்தில் வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். சேலம் பொன்னம்மாப்பேட்டையில் ஹரி தவமணி தம்பதி மற்றும் உறவினர்கள் இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேர் இருசக்கர வாகனங்களில் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது கட்டுப்பாடில்லாமல் அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று அவர்கள் மீது பலமாக மோதியது. விபத்தில் 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தவமணி மட்டும் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன






