--- --:--:-- --

அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் ரூ.75 கோடி செலவில் சிசிடிவி கேமரா

1

பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்ஜெட்டில் குறிப்பிட்ட நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் நிர்பயா நிதியை கொண்டு 75 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்தார்.

 

பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்தும் வகையில் மின்னணு பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 525 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய பேருந்துகள் வாங்க 960 கோடி ரூபாயும் உயர்தரமான பொது போக்குவரத்தை வழங்கிட 298 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்க 1,050 கோடி ரூபாயும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பயன்பெற ஆயிரத்து 93 கோடி ரூபாயும் போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon