--- --:--:-- --

சுஷாந்த் மரண வழக்கில் அவரது காதலி ரியா மீது சி‌பி‌ஐ வழக்குப்பதிவு..!

5.1

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14-ம் தேதி தனது மும்பை வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தார்.

 

அவரது மரணம் தொடர்பான சர்ச்சைகளை அடுத்து பீஹார் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

அதன்படி பிஹார் காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தி, அவரது பெற்றோர், சகோதரர் மேலும் இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை காவல்துறையினர் சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சர்ச்சை எழுந்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரைத்தது. அதை ஏற்று மத்திய அரசு உத்தரவிடவே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை சிபிஐ உடனடியாக விசாரிக்க தொடங்கியுள்ளது.

 

இதையடுத்து பீகார் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் ரியா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon