12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 65 வயது முதியவர்..!
தமிழகத்தில் பாலியல் வன் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லியில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது போல பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பேச்சு நிலவி வருகிறது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிறு குழ்நதையை முதியவர் பாலியல் கொடுமை செய்வதும், இளைஞன் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் வேலூர் மாவட்டம் காட்பாடியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
காட்பாடி வள்ளிமலை அருகே உள்ள மௌனகுரு சாமி கோவில் தெருவில் ஜோசப் என்பவர் தையல்கடை வைத்துள்ளார். தையல் கடையில் சிறுவர்களுக்கு தையல் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த கடைக்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த பொதுமக்கள் ஜோசப்பிற்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.







