--- --:--:-- --

சாதி மறுப்பு திருமணம்…காதலி தற்கொலை செய்து கொண்டதால் காதலனும் தற்கொலை..!

12

சென்னையை அடுத்த பட்டாபிராமில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் தம்பதி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடுக்குத்தகையை சேர்ந்த அரவிந்தன் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவரை அவரின் பெற்றோர் எதிர்ப்பை மீறி 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

 

இந்த தம்பதியை பெண் வீட்டார் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அவர்கள் பிரிந்துள்ளனர். இதையடுத்து பவித்ராவின் பெற்றோர் அவருக்கு வேறு திருமணம் செய்ய முயன்றதால் சில தினங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

 

இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட அரவிந்தன் தனது மரணத்திற்கு பவித்ராவின் தாயும் அவரது மாமாவும் தான் காரணம் என பேஸ்புக்கில் பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon