--- --:--:-- --

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மணமகன் குடும்பத்தினர் மீது தாக்கு…!”மணப்பெண் கடத்தல்” கோவையில் பரபரப்பு!!

992e7480-3e8c-440e-a646-d2d2b61697d3

கோவை துடியலூர் இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும்,திருச்சியை சேர்ந்த சக்தி தமிழனி பிரபா என்பவரும் கடந்த 5 ம் தேதி கோவையில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். கார்த்திகேயனின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் சக்தி தமிழ் பிரபாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

 

இந்நிலையில் திருமணத்தை முறையாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, கார்த்திகேயனின் வீட்டில் தம்பதியர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்த சக்தி தமிழினி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திகேயனையும் , அவரது தாயார் வசந்தகுமாரியையும் தாக்கி விட்டு பெண்ணை காரில் கடத்தி சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்த வசந்தகுமாரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .தனது மனைவியை அவரது பெற்றோர் ஆணவக்கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், காவல்துறை தனது மனைவியை மீட்டு கொடுக்க வேண்டுமெனவும், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். துடியலூர் காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் மணமகன் குடும்பத்தினரை தாக்கி மணப்பெண் கடத்தப்பட்ட சமபவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon