ஏ.ஆர் முருகதாஸ் மீதான வழக்கு ரத்து..!
சர்க்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் சர்க்கார்.
இந்தபடம் அரசின் திட்டங்களை தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீது தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கிய நிலையில் வழக்கை முழுமையாக ரத்து செய்யக்கோரி முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் விண்ணப்ப மனுவை தாக்கல் செய்தார். நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தணிக்கை முடிந்து வெளிவந்த திரைப்படம் குறித்து தனிநபரோ, அரசோ கேள்வி எழுப்ப முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி தனது அரசியலமைப்பில் வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.







